பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குதல்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 07 பெண்தலைமையை அடிப்படையாகக் கொண்ட பயனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார  உதவி வழங்குவதன் மூலமாக  அவர்களின் வாழ்வாதாரத்தினையும் பொருளாதாரத்தினையும் உயர்வடையச் செய்வதன் அடிப்படையில்  சமையல் பாத்திரம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் இச்செயற்றிட்டமானது பருத்தித்துறை பிரதேச சபையின் தலைமையலுவலகத்தில் சபை செயலாளர் திரு.அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் இன்று  பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

விசேட அறிவித்தல் – நடமாடும் ஆதனவரி அறவிடுதல்

தற்போது நடைபெற்று வரும் நடமாடும் ஆதனவரி அறவிடுதல் செயற்பாட்டில்

2025.03.04  –               ஆரம்ப சுகாதார நிலையம், புனிதநகர்  –              ஜே406

2023.03.05 –     புமகள் ச.ச.நிலையம்,பொலிகண்டி        – ஜே396                           ஆகிய தினங்களில் மேற்கொள்ளவிருந்த நடமாடும் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன்  இச் சேவையானது பின்வரும் தினங்களில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

2025.03.20  –               ஆரம்ப சுகாதார நிலையம், புனிதநகர்  –   ஜே406

2023.03.25 –                புமகள் ச.ச.நிலையம்,பொலிகண்டி        – ஜே396

 

பருத்தித்துறை பிரதேச சபை.

 

நடமாடும் ஆதனவரி அறவிடுதல் – 2025

நடமாடும் ஆதனவரி அறவிடுதல் – 2025

பருத்தித்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதனவரியை ஒழுங்குபடுத்தி அறவிடுதல் செயற்பாடானது நடமாடும் ஆதனவரி அறவிடுதல் முறை மூலமாக சபையின் செயலாளர் திரு. அ.வினோராஜ் அவர்களின் ஏற்பாட்டில் கிராம அலுவலர் பிரிவின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. மேலும் பொதுமக்கள் தங்களது ஆதனவரியை இலகுவான முறையில் செலுத்திக்கொள்வதற்காக வட்டார அடிப்படையில் இம்முறை சிறப்பான முறையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

நடமாடும் ஆதனவரி செயற்பாட்டிற்கான கால அட்டவணை பின்வருமாறு காணப்படுகின்றது.

இல வட்டாரம் திகதி நேரம் நடைபெறவுள்ள இடம் கிராம அலுவலர் பிரிவு
1  

புலோலி கிழக்கு

 

19.02.2025 9.00 மு.ப புலாலி வடகிழக்கு ச.ச.நிலையம் ஜே408
2 பொலிகண்டி 20.02.2025 9.00 மு.ப அம்பிகை ச.ச.நி ஜே394
3 வல்லிபுரம் 21.02.2025 9.00 மு.ப தேவரன் சிறுவர் பங்கா ஜே415
4 புலோலி கிழக்கு

 

25.02.2025 9.00 மு.ப கற்கோவளம் ச.ச.நி ஜே406
5 பொலிகண்டி 27.02.2025 9.00 மு.ப பாரதி ச.ச.நி ஜே395
6 கெருடாவில் 28.02.2025 9.00 மு.ப கலையரசி ச.ச.நி ஜே385
7 புலோலி கிழக்கு

 

04.03.2025 9.00 மு.ப ஆரம்ப சுகாதார நிலையம் ஜே406
8 பொலிகண்டி 05.03.2025 9.00 மு.ப புமகள் ச.ச.நி ஜே396
9 வியாபாரிமூலை 06.03.2025 9.00 மு.ப கலைமணி ச.ச.நி ஜே399
10 வல்லிபுரம் 07.03.2025 9.00 மு.ப வல்லியானந்தம் ச.ச.நி ஜே417
11 புலோலி கிழக்கு 11.03.2025 9.00 மு.ப தும்பளை ச.ச.நி ஜே404
12 வல்லிபுரம் 14.03.2025 9.00 மு.ப வல்லிபுரம் பொதுநோக்கு மண்டபம் ஜே416
13 கெருடாவில் 18.03.2025 9.00 மு.ப அண்ணா ச.ச.நி ஜே385
14 வியாபாரிமூலை 19.03.2025 9.00 மு.ப அல்வாய் வடமத்தி பொதுநோக்கு மண்டபம் ஜே398
15 புலோலி 21.03.2025 9.00 மு.ப கந்தமுருகேசனார் ச.ச.நி ஜே411
16 புலோலி கிழக்கு 26.03.2025 9.00 மு.ப புற்றளை ச.ச.நி ஜே413
17 புலோலி கிழக்கு 28.03.2025 9.00 மு.ப பெரியதேவனத்தாய் ச.ச.நி ஜே413
18 அல்வாய் வடமேற்கு 02.04.2025 9.00 மு.ப திக்கம் மத்திய ச.ச.நி ஜே397
19 வல்லிபுரம் 04.04.2025 9.00 மு.ப புலோலி தெற்கு மாதர் சங்கம் ஜே414
20 அல்வாய் வடமேற்கு 09.04.2025 9.00 மு.ப இளங்கோ ச.ச.நி ஜே400
21 புலோலி 11.04.2025 9.00 மு.ப காந்தியுர் ச.ச.நி ஜே412
22 புலோலி 25.04.2025 9.00 மு.ப வத்தனை பொதுநோக்கு மண்டபம் ஜே410

POS Machine மற்றும் QR மூலமாக பணம் செலுத்தும் முறை

பருத்தித்துறை பிரதேச சபையில் பொதுமக்கள் தங்களது சேவையினை பெற்றும் போது  பணப்பரிமாற்றத்தினை இலகுபடுத்தி பணப்பரிமாற்ற பாவனையினை  குறைக்கும்  வகையில் POS Machine  மற்றும் QR மூலமாக  ATM Card (தன்னியக்க இயந்திர அட்டை) முறையை பயன்படுத்தி  பணத்தினை செலுத்திக் கொள்ள முடியும்.

பொதுமக்கள் தங்களது சேவைக்கான பணத்தினை POS Machine  மற்றும் QR மூலமாக  ATM Card (தன்னியக்க இயந்திர அட்டை) முறை ஊடாக 2025.02.10 ஆம் திகதியிலிருந்து கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

கடற்கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வு – தாளையடி (2025)

”அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் தொனிப்பொருளில் கிளீன் சிறிலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டம் சார் கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வானது 2025.01.22 ஆம் திகதி மு.ப7.00 மணியளவில் தாளையடி கடற்கரையில் 6Km அளவில் 522 காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபையுடன் இணைந்து சுத்தப்படுத்தல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி பிரதம அதிதியாக  கலந்து சிறப்பித்ததுடன் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் திரு.அ.வினோராஜ், மருதங்கேணி பிரதேச செயலாளர், கட்டைக்காடு மற்றும் செம்பியன்பற்று 1VIR இராணுவப் படைப்பிரிவின் அதிகாரிகள், மதகுருமார்கள், கரையோர மூல வள  முகாமைத்துவ  திணைக்கள பொறியியலாளர், முள்ளியான் ஆரம்ப சுகாதார நிலைய  வைத்திய அதிகாரி, தாளையடி நீர்வளங்கல் திட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பருத்தித்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கலாக 750 பேர் கலந்து கொண்டனர். சுத்தப்படுத்தலின் போது பெறப்பட்ட கழிவுகளானது பருத்தித்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனம் மூலமாகவும் இராணுவத்தினரின் வாகனம் மூலமாகவும் மொத்தம் 10 வாகனங்களின் ஊடாக பிரதே சபையின் கழிவ சேகரிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இந்நிகழ்வானது மு.ப11.45 மணியளவில் நிறைவடைந்தது.

    

2025 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு

இந்நிகழ்வானது பருத்தித்துறை பிரதேச சபையில்  சபையின் செயலாளர் திரு.அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் மு.ப8.30 மணியளவில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரின் பங்குபற்றுதலோடு சபையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு இவ்வாண்டிற்கான கடமைப் பொறுப்புக்களும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இவ்வாண்டில் “Clean SriLanka எனும் தொனிப்பொருளில் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக் கூறும் தொழிற்பாடாம்.  இன, மத, அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதாகும்.

   

இணையவழி நிகழ்நிலை கட்டணம் (online payment)

பருத்தித்துறை பிரதேசசபையின் இணையவழி நிகழ்நிலை கட்டணமானது(online payment) சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உள்ளுராட்சி மாத தேசிய வாசிப்பு மாத மற்றும் பண்பாட்டு விழா- 2024நிகழ்வில் மதிப்பிற்குரிய வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பருத்தித்துறை பிரதேசசபையில் UNDP-CDLG திட்டத்தின் கீழ் வயம்ப அபிவிருத்தி நிறுவனத்தினரின் மென்பொருளின்(Cat2020) ஊடாக  பிரதேசசபைக்குரிய ஆதனவரி மற்றும் சேவைக்கட்டணங்களை அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தும் வசதியானது  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வருகைதராமல் வீட்டிலிருந்தவாறே பணத்தினை செலுத்துவதற்கு வசதியாக இணையவழி நிகழ்நிலை (online payment) மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் வசதி 2025.01.01 இல் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

பிரதேசசபைக்குரிய இணையத்தளத்தின் (pointpedro.ps.gov.lk) ஊடாகச் சென்று Online payment எனும் பகுதியினை அழுத்துவதனூடாக pay.cat2020.lk எனும் நிகழ்நிலை மூலம் கொடுப்பனவு செய்யும் பக்கத்தினை அடைய முடியும். அல்லது pay.cat2020.lk எனும் முகவரிக்கு செல்வதன் மூலம் நேரடியாக பக்கத்திற்குள் நுழைய முடியும். உலகத்தின் எப்பாகத்தில் இருந்தாலும் இதில் பணத்தினை பாதுகாப்பான முறையில் செலுத்திக் கொள்ள முடியும்.

 

 

உள்ளுராட்சி மாத தேசிய வாசிப்பு மாத மற்றும் பண்பாட்டு விழா 2024

2024 ஆம் ஆண்டிற்கான இந் நிகழ்வானது 2024.12.11 ஆந் திகதி SS Complex   இல் சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. பொன்னம்பலம் சிறிவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பிருந்தார்.

இந்நிகழ்வானது பல்வேறுபட்ட கலை விடயங்களை உள்ளடக்கியதாக நடைபெற்றது சிறப்பானதாக காணப்பட்டது. அந்தவகையில் கலை நிகழ்வுகள்(நாட்டார் பாடல்,காத்தவராயன் கூத்து பகுதி), கலைஞர்களுக்கான கௌரவிப்பு, பாடசாலை மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, சிறுகதை, சதுரங்கம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல், சனசமூக நிலையங்களுக்கிடையிலான பெண்களுக்கான கயிறுழுத்தல், கிடுகு பிண்ணுதல் மற்றும் ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி, துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்று அவற்றிற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் வரவு செலவு திட்டம் -2023ஆம் ஆண்டிற்கான பயனாளி ஒருவருக்கான துவிச்சக்கரவண்டியும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. பொன்னம்பலம் சிறிவர்ணன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

   

அவசர தொடர்பு இலக்கம் 0743446038 Hot Line No: 021 226 3276

பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்  பொது மக்கள் அனர்த்த முகாமைத்துவத்தினை உடனடியாக கையாளும் வகையிலும் அனர்த்தம் தொடர்பான முறைப்பாடுகளை உடனடியாக பதிவிடுவதற்கும் ஏற்ற வகையில் இவ் WhatsAPP இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும்.