2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வேலைத்தெரிவு

பருத்தித்துறை பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வேலைத்தெரிவிற்கான  வட்டார ரீதியிலான மக்களுடனான கலந்துரையாடலுக்கான கால அட்டவணை

சுவர்ண புரவர தேசிய விருது விழா – 2024

செயலாற்றுகை மதிப்பீடு 2.0 கீழ் தேசிய மட்டத்தில் ஆரம்ப கட்டமாக 21 மாநகரகபை, 41 நகரசபை மற்றும் 276 பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் செயல் திறன் முகாமைத்துவம், சேவைவழங்கல், ஆளுகை  நீடித்து நிற்பதற்கான இலக்குகளை அடைவதற்கான பங்களிப்பு ஆகிய பிரதான 4 பகுதிகளின் கீழ் 200 குறிகாட்டிகளின் இணக்கப்பாடு, வினைத்திறன், விளைதிறன் மற்றும் புத்துருவாக்கங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றில் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 19 மாநகரசபை, 22 நகரசபை மற்றும் 27 பிரதேச சபைகளுக்கு தேசிய மட்டத்திலான மதிப்பீடு இடம்பெற்று தரவரிசைப்படுத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பிரதேச  சபைகளுக்கிடையில் நான்காம் இடத்தினை பெற்றதுடன் அனைத்து குறிகாட்டிகளிலும் இணைக்கப்பாட்டிற்கான மதிப்பீட்டில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்றிட்டம் – கற்கோவளம்

வட மாகாணத்தின் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் அறிவுத்தலுக்கமைய கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நிகழ்வானது பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட நீண்ட கரையோரத்தினை கொண்டுள்ள கற்கோவளம்(J/406) பகுதியில் இன்று 2024.04.03 காலை 7.00 – 9.00 மணிவரையில் கடற்கரைப்பகுதியில் பருத்தித்துறை பிரதேச சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் இப்பகுதியின் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேசசபையின் ஏனைய வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், கற்கோவளம் சனசமூக நிலையம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், பருத்தித்துறை பிரதேசசபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் இவ்நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. கலந்து தொண்டவர்களுக்கான குளிர்பாணமும் பருத்தித்துறை பிரதேசசபையால் வழங்கப்பட்டது. ஒத்துழைப்பு வழங்கி இச்செயற்றிட்டத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்கு உதவிய அனைவருக்கும் பருத்தித்துறை பிரதேசசபை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தாழையடி கடற்கரை சுற்றுலா மையத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வு

ஒவ்வொரு பிரதேசத்தின் அழகினை அதிகரிப்பதற்கு அப்பகுதியின் சுற்றுலா தளங்கள் முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அந்த வகையில் சுற்றுலா மையமாகக் காணப்படும் தாழையடி கடற்கரைப் பகுதியை(வடமராட்சி கிழக்கு) அபிவிருத்தி செய்து கொள்வதற்கான ஆரம்ப கட்ட ஆய்வானது 2024.04.02 ஆம் திகதி உதவி பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை. உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச  செயலகம், மருதங்கேணி. , செயலாளர், பருத்தித்துறை பிரதேசசபை. ஆகியோர் நேரடியான கள ஆய்வினை மேற்கொண்டதன் அடிப்படையில் இச் சுற்றுலா மையத்திற்கான திட்ட முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்கள். இப்பகுதியானது அதிகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் நீண்ட கடற்கரையோரத்தினை கொண்ட பகுதியாக உள்ளதாலும் அதிகளவு கடல் உணவுகளை பெற்றுத்தருவதாலும் அப்பகுதியை சுற்றுலா மையமாக தெரிவ செய்து அதன் நிலைத்திருப்பின் தன்மையின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் வருமானத்தினை பெற்றுக் கொள்ளவதன் அடிப்படையில் அப்பகுதியை  விருத்தி செய்து கொள்ள முடிவதுடன் சிறந்த பொழுது போக்கு மையமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.    

“FARM TO GATE” செயலி மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.  சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக 2024.03.22 அன்று இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. விவசாய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து கொள்வதற்கும் அதன் பயனினை நேரடியாக பெற்றுக் கொள்வதற்கும் என உருவாக்கப்பட்ட செயலியே இதுவாகும். இவ் இணைய செயலியினை பார்வையிடுவதற்கும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் www.farmtogate.org எனும் முகவரியினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்திட்டம்- 2024

வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள கடற்கரையோரத்தினை கொண்டுள்ள பகுதிகளில் கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் செயற்பாடுகள் சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கான வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபை உத்தியோகத்தர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சுத்தப்படுத்தலின் போது அதிகளவில் பிளாஸ்ரிக் பொருட்களை காணக்கூடியதாக இருந்ததுடன் சேகரிக்கப்பட்ட இக்கழிவுகள் பொருத்தமான முறையில்  பிரதேசசபையினால் அகற்றப்பட்டது. பின்வரும் இடங்களில் இச் செயற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இல கிராமசேவகர் இல கிராமசேவகர் பிரிவு மேற்கொள்ளப்பட்ட திகதி
1 J/398 அல்வாய் மத்தி 2020.03.15  
2 J/418 மணற்காடு 2020.03.22
4 J/420 குடத்தனை வடக்கு 2020.03.19
5 J/421 பொற்பதி 2020.03.22
7 J/423 நாகர்கோவில் கிழக்கு 2020.03.15
8 J/424 நாகர்கோவில் மேற்கு 2020.03.15
9 J/425 நாகர்கோவில் தெற்கு 2020.03.22
10 J/426 செம்பியன்பற்று வடக்கு 2020.03.22
11 J/432 வெற்றிலைக்கேணி - 2020.03. 16
12 J/433 முள்ளியான் 2020.03.19
13 J/429 வத்திராயன் 2020.03.15
14 J/430 உடுத்துறை 2020.03.15
15 J/431 ஆழியவளை 2020.03.15
16 J/428 மருதங்கேணி- 2020.03.15
 

வாகனம் தரிப்பதற்கான தடை பலகை இடல்(2024.03.14)

பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள மந்திகை ஆதார வைத்தியசாலையின் வீதியின் இருபுறங்களிலும் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வருகை தரும் பார்வையாளர்களாகிய பொதுமக்கள் தமது வாகனங்களினை அப்பகுதியில் நிறுத்தி வைப்பதால் வைத்தியசாலைக்கு சேவையினை பெற்றுக் கொள்வதற்க வரும் நோயளர்கள் சிரமத்திற்குள்ளாவதுடன் அப்பகுதிகளில் வாகன விபத்துக்களும் அதிகளவில் நடைபெறுவதாலும் நோயாளர் காவு வண்டி  சேவைக்கு பாரிய இடையூறாக உள்ளதாலும்  இப்பிரச்சனைகளை கட்டுப்படுத்தி நோயாளர்களை பாதுகாக்கும் வகையில் மந்திகை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மற்றும் வீதிப்போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு,பருத்தித்துறை பொலிஸ் நிலையமும் கேட்டுக் கொண்டதற்கமைய பருத்தித்துறை பிரதேசசபை செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களால் இச் செயற்பாடு 2024.03.14 அன்று மேற்கொள்ளப்பட்டது. ஆகவே பொதுமக்களாகிய பார்வையாளர்கள் நீங்கள் உங்கள் உறவினர்களின் நலனினை கருத்தில் கொண்டு உங்களது வாகனங்களை பொருத்தமான பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது சிறப்பானதாகும்.  

விரைவு எதிர்வினை குறி(QR) முறையினை அறிமுகப்படுத்தல்

பருத்தித்துறை பிரதேசசபையில் வருமானத்தினை பெற்றுத்தரும் விடயங்களின் வேலையை துரிதப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு விடயங்களினையும் இலகுபடுத்தி நேரத்தினை குறைத்துக் கொள்ளும் வகையிலும் பொது மக்கள் தமது பணத்தினை இலகுவாக பரிமாற்றம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இவ் விரைவு எதிர்வினை குறியானது  2024.03.04  இலங்கை வங்கி உத்தியோகத்தர்களால் சபையின் செயலாளர் திரு. அ. வினோராஜ் அவர்களிடம் விரைவு எதிர்வினை குறியானது(QR) வழங்கி வைக்கப்பட்டதுடன் அதனை பயன்படுத்தும் முறையினையும் வங்கி உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தினார்கள். இதன் ஊடாக சபைக்குச் சொந்தமான எல்லா விதமான கொடுப்பனவுகளையும் அதனூடாகவே பொதுமக்கள் மேற்கொள்ள முடியும். மேலும் விசேட பணம் செலுத்தும் நடைமுறையை செயல்படுத்துவதற்காக இக்குறியானது ஒவ்வொரு உப அலுவலகத்திற்கும் மற்றும் தலைமையலுவலத்திற்குமாக நான்கு விரைவு எதிர்வினை குறிகளினை இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் சபையின் செயலாளரிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு தலைமையலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை வெளியிடும் அங்குரார்ப்பண நிகழ்வு

வடக்கு மாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை கௌரவ ஆளுநர் அவர்களினால் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வானது 2024.03.01ஆந் திகதியன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP-CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்கள் UNDP-CDLG திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு சபைகளுக்குரிய இணையத்தளங்களினை அந்தந்த சபைக்குரிய உத்தியோகத்தரினால் வடிவமைக்கப்பட்டமை  நிலைத்திருப்பிற்கான ஓர் செயற்பாடாவதுடன் சிறப்பான விடயமாகவும் காணப்படுகின்றது.

இவ் இணையத்தளத்தினை வடிவமைப்புச் செய்த அச்சபையின் உத்தியோகத்தர்களுக்கு இந்நிழ்வில் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறை பிரதேசசபையின் இணையத்தள முகவரியினை பார்வையிடுவதற்கு pointpedro.ps.gov.lk சென்று பார்வையிட முடியும்.

கழிவு சேகரிக்கும் மையம்

பருத்தித்துறை பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களை கருத்தில் கொண்டு அவர்கள் சிறந்த முறையில் திண்மக்கழிவினை அகற்றுவதற்கும் அதனை பிரதேசசபையானது சிறப்பாக முகாமை செய்வதற்கும் ஏற்ற வகையில் சபையின் செயலாளர் திரு. அ. வினோராஜ் அவர்களால் மருதங்கேணி வீதியிலுள்ள சபைக்கு சொந்தமான இடத்தில் கழிவு சேகரிக்கும் மையம் ஒன்றினை திறந்து வைத்துள்ளார். இவ் மையமானது வாரத்தின் 6 நாட்கள்(திங்கள் - சனி) வரையில் காலை மு.ப10.00 தொடக்கம் பி.ப 6.00 மணி வரையில் அதன் சேவைகள் நடைபெறும் எனவும் செயலாளர் திரு. அ. வினோராஜ் அவர்கள் கூறியுள்ளார்.