வியாபார உரிமம்

அதிகாரப் பிரதேசத்துக்குள் அமைந்துள்ள கைத்தொழில்கள் வியாபாரம், வர்த்தகங்களிலிருந்து வருடாந்தம் கட்டணமொன்றை அறவிட்டுக்கொள்ள 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 147இ149;; பிரிவுகளின் கீழ் இடமளிக்கப்பட்டுள்ளதுடன் அக்கட்டணம் அறவிடமுடிவது குறித்த 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 122 ஆம் பிரிவு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்படும் துணைவிதிகளில் காட்டப்பட்டுள்ள பணிகளுக்காக அத்துணைவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டதும் ஆகும்
இதற்கமைய உச்ச கட்டணமாக பிரதேசசபைகளுக்கு ரூபா 1000.00 வியாபார அனுமதிப்பத்திரக்கட்டணமாக அறவிட்டுக்கொள்ள முடியும். அனுமதிப்பத்திரக்கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 122(2) பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இதற்கமைய கீழ்வரும் வியாபார நிலையங்களுக்கு வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கி அனுமதிப்பத்திரக்கட்டணம் அறவிட்டுக்கொள்ள முடியும்.

1. சிற்றுண்டிச்சாலை, உணவகம், தேநீர் கடை, கோப்பிக்கடை
2. ஹொட்டல்,விடுதி (உறங்கு மனைகள்)
3. வெதுப்பகம்
4. பனிக்கட்டிதொழிற்சாலை
5. குளிர்பானத்தொழிற்சாலை
6. சகிக்க முடியாததும், அபாயகரமானதும், சகிக்க முடியாததும் அபாயகரமானதுமான தொழில்கள்
7. இறைச்சி விற்பனை
8. மீன் விற்பனை
9. சிகையலங்கரிப்பு நிலையம்

மேற்படி வியாபார நிலையங்களுக்கு வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கி அனுமதிப்பத்திரக்கட்டணம் அறவிட்டுக்கொள்ளும் நடைமுறைகள் கீழ்வருமாறு

1. வியாபார விண்ணப்பத்தை வழங்கல்
2. வியாபார விண்ணப்பத்தைப் பூரணப்படுத்தி சமர்ப்பிக்கும் போது கீழ்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்
I வியாபார நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்
II நிலுவை அற்ற சோலை வரி அறவீட்டு அறிக்கை
III மேற்குறிப்பிடப்பட்ட சில வியாபார நிலையங்களுக்கு சுற்றுச்சுழல் உரிமம்,மதுவரி உரிமம், வெட்டு மரம் தொடர்பான அனுமதிப்பத்திரம், உபயோகமாற்ற அனுமதி, குடிபுகுசான்றிதழ், கனிம வள பயன்பாட்டு உரிமம் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்டல் வேண்டும்
3. விண்ணப்பத்தை பொது சுகாதார பரிசோதகரின் பரீசீலனைக்காக அனுப்புதல்.
பொது சுகாதார பரிசோதகரினால் குறிப்பிடப்படுகின்ற குறைபாடுகளை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்தல் வேண்டும்.

4. மேற்குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தி செய்யப்படும் இடத்து வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கி அனுமதிப்பத்திரக்கட்டணம் அறவிட்டுக்கொள்ள முடியும்.

விண்ணப்பப்பத்திரங்களை பருத்தித்துறை பிரதேசசபையின் உப அலுவலகங்களான புலோலி உப அலுவலகம், குடத்தனை உப அலுவலகம், மருதங்கேணி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

வருமான பரிசோதகர்

விடய உத்தியோகத்தர்

தொடர்பு இலக்கம் – 021 226 1707