களியாட்ட வரி

களியாட்ட வரி கட்டளைச்சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கமைய சபையின் அதிகாரப்பிரதேசத்துக்குள் நடாத்தப்பட்டு வருகின்ற படமாளிகைகள் , நாடக அரங்கங்கள், களியாட்டநிலையங்கள், மற்றும் தனிநபர்களால் ஒழுங்கு செய்யும் களியாட்ட நிகழ்ச்சிகள் காட்சிகள் சம்பந்தமாக வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களின் பெறுமதிகளுக்கேற்ப 5% தொடக்கம் 25% வரை வரித்தொகை அறிவிடப்படும்
மேற்படி களியாட்ட நிலையங்களில் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களில் பிரதேசசபையின் இலட்சனை பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. விண்ணப்பப்படிவம்

விண்ணப்பப்பத்திரங்களை பருத்தித்துறை பிரதேச சபையின் உப அலுவலகங்களான புலோலி உப அலுவலகம், குடத்தனை உப அலுவலகம், மருதங்கேணி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

2.வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பெறுமதியிலான அச்சிடப்பட்ட நுழைவுச்சீட்டுகள் மற்றும் இணையம் ஊடாக வழங்குவதற்கு உத்தேசித்துள்ள இலத்திரனியல் நுழைவுச்சீட்டுகளின் பெறுமதி மற்றும் எண்ணிக்கைகளுடன் சபையின் இலத்திரனியல் முத்திரையிடலை இலகுப்படுத்த தேவையான கடவுச்சொற்களை அலுவலக முன் காரியாலயத்திற்கு வழங்கல்.

செலுத்த வேண்டிய கட்டணம்

கேளிக்கை வரிக் கட்டணத் தொகையை சபைத் தீர்மானமாக நிறைவேற்றி, அமைச்சரின் அனுமதி பெற்று வர்த்தமானி பத்திரிகையில் அறிவித்தல் வெளியிட வேண்டும்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்
2. விடய உத்தியோகத்தர்

3. வருமான பரிசோதகர்

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை

அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டால் 2-3 நாட்களில்

தொடர்பு இலக்கம் – 021 226 1707