அமைவுச் சான்றிதழ் வழங்குதல்

உள்ளுராட்சி மன்றத்தின் எல்லைக்குள் மேற்கொள்கின்ற எந்தவொரு வகையிலுமான கட்டுமானம் அல்லது  காணி உபபிரிவிடல் அல்லது காணிகளை ஒன்றிணைத்தல் என்பன மேற்கொள்வதற்கு  முன்னர் அதற்காக  அபிவிருத்தி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளுதல் கட்டாயமானதாகும். அவ்வாறான அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்துடன் மேற்கொள்கின்ற கட்டுமானம், காணி உப பிரிவிடுகை மற்றும் காணி ஒன்றிணைத்தல் மேற்கொண்ட பின்னர் கட்டிடத்தினை பயன்படுத்துவதற்கு முன்னர் அல்லது காணியாகுமிடத்து  அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்திடமிருந்து இசைவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
 
'இசைவுச் சான்றிதழ்' என்பது, கட்டுமாணமானது அங்கீகரிக்கப்பட்ட திட்டம் மற்றும் அதற்கு ஏற்புடையதான அனுமதிப் பத்திரத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைவாக நிருமாணிக்கப்பட்டுள்ளதாகவும், காணி உபபிரிவிடல் அல்லது ஒருங்கிணைத்தல்  என்பவற்றுக்காக வழங்கிய அனுமதிக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வழங்கப்படும் சான்றிதழாகும்.
 
சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
 
1.முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்
 
2. நடப்பாண்டு ஆதன வரி செலுத்திய பற்றுச் சீட்டின் பிரதி
 
3. ஒரு மாத காலத்தினுள் காணி பதிவகத்திலிருந்து இறுதியாக மாற்றம் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோம்பும் உறுதியின் பிரதியும். அரச காணி எனின் காணி அனுமதி பத்திரத்தின் பிரதி
 
4. உள்ளுராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட அபிவிருத்தி அனுமதி பத்திரம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி அல்லது திருத்திய அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி
 
5. ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் பிரதி  
 
7. சில விசேட சந்தர்ப்பங்களின்போது தேவைப்படுத்தப்பட்டால் 08.07.2021 ஆம் திகதிய 2235/54 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வாத்தமானி பத்திரிகை ஆக்கப்பட்ட விதிகளின் உப பிரிவு 85 (2) இற்கமைவாக I –VIII வரையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
 
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள் 
 
1. முன் அலுவலக அதிகாரி; மற்றும் விடய உத்தியோகத்தர்
 
2. தொழில்நுட்ப அதிகாரி அல்லது பொது சுகாதார வைத்திய அதிகாரி
 
சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 
 
14 நாட்கள் - 21 நாட்கள் (துல்லியமான ஆவணங்கள் சமர்ப்பிக்கின்ற பட்சத்தில்)