கட்டட நிர்மாண அனுமதி

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  2. கட்டட வரைபடம்- மூலப் பிரதிகள் -3
  3. நடப்பு ஆண்டிற்கான மதிப்பீட்டு வரி செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு – பிரதி 1.
  4. நில உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை – புகைப்பட பிரதி 1
  5. 30 ஆண்டுகளுக்கான வரலாற்றுத் தாள்கள்- புகைப்படப் பிரதிகள், ஆனால் அசல் பிரதி ஆரம்ப சரிபார்ப்புக்குக் கிடைக்க வேண்டும்.
  6. நில அளவைப்படம் – புகைப்பட பிரதி 3, ஆனால் அசல் பிரதி ஆரம்ப சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்.
  7. சட்ட ரீதியான காணி ஆவணம் ( உறுதிப்படுத்தப்பட்டது) புகைப்பட பிரதிகள் -3, ஆனால் அசல் பிரதி முதற்கட்ட  சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்.
  8. உபபிரிவிடல் – பிரதி 1 (தேவை ஏற்படின்).
  9. காணி 6 பேர்ச்களுக்கு குறைவாக இருந்தால் நகர அபிவிருத்தி   அதிகாரசபை அனுமதி பெற வேண்டும் புகைப்பட பிரதிகள் – 3
    1. வதிவிடம் அல்லாத கட்டடம் எனின் 400 M2 க்கு மேல் நகர அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி பெறப்பட வேண்டும் – புகைப்பட பிரதி – 3
    2. வதிவிடக்கட்டட நிர்மாணம் எனின் 1000 M2 பரப்பளவு அல்லது 15 உயரத்திற்கு அதிகமாக                  இருப்பின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவேண்டும்.
  10. நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தால், பிரதேச செயலகத்திலிருந்து நீண்டகால               குத்தகை ஒப்பந்தம் பெறப்பட வேண்டும். தனியார் அல்லாத நிலத்தில் கட்டட அனுமதி      வழங்கப்பட வேண்டுமானால், பிரதேசசெயலக அனுமதி தேவை 
செலுத்த வேண்டிய கட்டணம்
அபிவிருத்தியின் தன்மைக்கேற்ப மாறுபடும். நீங்கள் சேவை கருமபீடத்துடன் கட்டண அட்டவணையை பரீட்சீர்த்து கொள்ளலாம்.
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள் 
முன் அலுவலக அதிகாரி; மற்றும் விடய உத்தியோகத்தர்
தொழில்நுட்ப அதிகாரி அல்லது பொது சுகாதார வைத்திய அதிகாரி
சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 
14 நாட்கள் – 21 நாட்கள் (துல்லியமான ஆவணங்கள் சமர்ப்பிக்கின்ற பட்சத்தில்)