குடிநீர் பவுசர் சேவை வழங்கல்

ஒவ்வொரு உள்ளுராட்சி சபையாலும் தனது அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக மக்களின் குடிநீர் தேவைகள் ஏற்படும் போதும் மற்றும் பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும் பவுசர் மூலம் தேவையான அளவு குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. அத்துடன் கொள்கலன்கள் கோரப்படும் போது அதற்கான வாடகையை அறவீடுசெய்து அத்தேவையையும் நிறைவேற்றுகின்றது.

செயல்முறை
1.விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
2.முற்கூட்டியே கட்டணத்தை முழுமையாக செலுத்துதல்.
3. நீர் விநியோகத்தினை பெற்றுக்கொள்ளுதல்.

சமர்ப்பிக்கவேண்டிய ஆவணம்
1.சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

தொடர்பு இலக்கம் – 021 226 1707