புலோலி பொதுநூலக வரலாறு

பருத்தித்துறை பிரதேசசபையின் கீழ் புலோலி, குடத்தனை, செம்பியன்பற்று ஆகிய இடங்களில் பொது நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வகையில்  புலோலிப் பொதுநூலகமானது 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1960ம் ஆண்டு சபையின் தலைவராக இருந்த சிதம்பரப்பிள்ளையின் காலப்பகுதியில் புலோலியிலுள்ள முதலியார் சனசமூக நிலையத்தில் இயங்கியது. 1975ம் ஆண்டு வேல்முருகு சுந்தரலிங்கம்(MPV) அவர்கள் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் புலோலிப் பொதுநூலகத்துக்கென சிலையடி மந்திகையில் காணி ஒதுக்கப்பட்டு நிரந்தரமான கட்டிடம் கட்டப்பட்டு நூலகசேவை வழங்கப்பட்டது. 1987/1988 காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக (Liberation Operation) நூலகம் பௌதீக அளவில் பாதிக்கப்பட்டு நூலக கட்டிடத்தினை 1991ம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு நூலக சேவையானது மேற்கொள்ளப்பட்டது. 2005.01.19ம் திகதி தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் புலோலி பொது நூலகத்தினை தரம் III ற்கு தரநிர்ணயம் செய்யப்பட்டது. இக் காலப்பகுதியில் “சென்னி” சஞ்சிகை வெளியிடப்பட்டது.   அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு நூலக அமைவிடத்தில் சபையின் தலைமை அலுவலகம் அமைக்கும் நோக்குடன் நூலகமானது ஆயுள்வேத வைத்தியசாலை கட்டிடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. நூலகத்திற்குரிய கட்டிட வசதியின்மையினை கருத்திற் கொண்டு 2023.10.24ஆண்டு மந்திகை சந்தையின் மேற்தளத்திறகு தற்காலிகமாக மாற்றப்பட்டு இன்று வரை நூலக சேவையானது மேற்கொள்ளப்படுகின்றது.

நூலகத்தில் நூற் சேகரிப்பானது கொள்வனவு மற்றும் அன்பளிப்பாகவும் பெறப்படுகின்றது. தற்போது 10,000 ற்கு மேற்பட்ட தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகள் உள்ள நூல்கள் காணப்படுகின்றது. 763 நூலக அங்கத்தவர்களையும் நாளொன்றிற்கு 75 பயனாளர்கள் (அங்கத்தவர்கள, வாசகர்கள்) பயன் பெறுகின்றனர். 2024ம் ஆண்டு நூலக விரிவாக்கல் சேவையின் ஓர் அங்கமாக பாடசாலை விடுமுறை நாட்களில் வடமராட்சி மாணவர்களிற்கு இலவச சதுரங்க பயிற்சியானது தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படுகிறது.

வருடாந்த வாசிப்பு மாத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிற்கு போட்டிகள் நடாத்தப்படுவதுடன் புத்தக கண்காட்சியும் ஒழுங்கமைக்கப்படுவதுடன் நூலக நடமாடும் சேவையும் மேற்கொள்ளப்படுகிறது. பொது மக்களுக்கு நூலக விழிப்புணர்வு சேவை வழங்கப்படுகிறதுடன் சபையின் கீழ் உள்ள பொது நூலகங்களுடன் நூற் பரிமாற்றல் சேவையினை மேற்கொண்டு வருகின்றோம்.

காலத்தின் தேவைக்கேற்ப நூலக தன்னியமாக்கல் திட்டத்தில் (Library Automation) நூலக ஆவணமாக்கல் சேவையுடன் இணைந்து மேற்கொள்ள நூலக தன்னியமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.