தாழையடி கடற்கரை சுற்றுலா மையத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வு

ஒவ்வொரு பிரதேசத்தின் அழகினை அதிகரிப்பதற்கு அப்பகுதியின் சுற்றுலா தளங்கள் முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அந்த வகையில் சுற்றுலா மையமாகக் காணப்படும் தாழையடி கடற்கரைப் பகுதியை(வடமராட்சி கிழக்கு) அபிவிருத்தி செய்து கொள்வதற்கான ஆரம்ப கட்ட ஆய்வானது 2024.04.02 ஆம் திகதி உதவி பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை. உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச  செயலகம், மருதங்கேணி. , செயலாளர், பருத்தித்துறை பிரதேசசபை. ஆகியோர் நேரடியான கள ஆய்வினை மேற்கொண்டதன் அடிப்படையில் இச் சுற்றுலா மையத்திற்கான திட்ட முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்கள்.

இப்பகுதியானது அதிகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் நீண்ட கடற்கரையோரத்தினை கொண்ட பகுதியாக உள்ளதாலும் அதிகளவு கடல் உணவுகளை பெற்றுத்தருவதாலும் அப்பகுதியை சுற்றுலா மையமாக தெரிவ செய்து அதன் நிலைத்திருப்பின் தன்மையின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் வருமானத்தினை பெற்றுக் கொள்ளவதன் அடிப்படையில் அப்பகுதியை  விருத்தி செய்து கொள்ள முடிவதுடன் சிறந்த பொழுது போக்கு மையமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *