”அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் தொனிப்பொருளில் கிளீன் சிறிலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டம் சார் கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வானது 2025.01.22 ஆம் திகதி மு.ப7.00 மணியளவில் தாளையடி கடற்கரையில் 6Km அளவில் 522 காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபையுடன் இணைந்து சுத்தப்படுத்தல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் திரு.அ.வினோராஜ், மருதங்கேணி பிரதேச செயலாளர், கட்டைக்காடு மற்றும் செம்பியன்பற்று 1VIR இராணுவப் படைப்பிரிவின் அதிகாரிகள், மதகுருமார்கள், கரையோர மூல வள முகாமைத்துவ திணைக்கள பொறியியலாளர், முள்ளியான் ஆரம்ப சுகாதார நிலைய வைத்திய அதிகாரி, தாளையடி நீர்வளங்கல் திட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பருத்தித்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கலாக 750 பேர் கலந்து கொண்டனர். சுத்தப்படுத்தலின் போது பெறப்பட்ட கழிவுகளானது பருத்தித்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனம் மூலமாகவும் இராணுவத்தினரின் வாகனம் மூலமாகவும் மொத்தம் 10 வாகனங்களின் ஊடாக பிரதே சபையின் கழிவ சேகரிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இந்நிகழ்வானது மு.ப11.45 மணியளவில் நிறைவடைந்தது.