இந்நிகழ்வானது பருத்தித்துறை பிரதேச சபையில் சபையின் செயலாளர் திரு.அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் மு.ப8.30 மணியளவில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரின் பங்குபற்றுதலோடு சபையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு இவ்வாண்டிற்கான கடமைப் பொறுப்புக்களும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் இவ்வாண்டில் “Clean SriLanka எனும் தொனிப்பொருளில் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக் கூறும் தொழிற்பாடாம். இன, மத, அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதாகும்.