2024 ஆம் ஆண்டிற்கான இந் நிகழ்வானது 2024.12.11 ஆந் திகதி SS Complex இல் சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. பொன்னம்பலம் சிறிவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பிருந்தார்.
இந்நிகழ்வானது பல்வேறுபட்ட கலை விடயங்களை உள்ளடக்கியதாக நடைபெற்றது சிறப்பானதாக காணப்பட்டது. அந்தவகையில் கலை நிகழ்வுகள்(நாட்டார் பாடல்,காத்தவராயன் கூத்து பகுதி), கலைஞர்களுக்கான கௌரவிப்பு, பாடசாலை மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, சிறுகதை, சதுரங்கம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல், சனசமூக நிலையங்களுக்கிடையிலான பெண்களுக்கான கயிறுழுத்தல், கிடுகு பிண்ணுதல் மற்றும் ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி, துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்று அவற்றிற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் வரவு செலவு திட்டம் -2023ஆம் ஆண்டிற்கான பயனாளி ஒருவருக்கான துவிச்சக்கரவண்டியும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. பொன்னம்பலம் சிறிவர்ணன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.