கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்திட்டம்- 2024

வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள கடற்கரையோரத்தினை கொண்டுள்ள பகுதிகளில் கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் செயற்பாடுகள் சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கான வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபை உத்தியோகத்தர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சுத்தப்படுத்தலின் போது அதிகளவில் பிளாஸ்ரிக் பொருட்களை காணக்கூடியதாக இருந்ததுடன் சேகரிக்கப்பட்ட இக்கழிவுகள் பொருத்தமான முறையில்  பிரதேசசபையினால் அகற்றப்பட்டது.

பின்வரும் இடங்களில் இச் செயற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இல கிராமசேவகர் இல கிராமசேவகர் பிரிவு மேற்கொள்ளப்பட்ட திகதி
1 J/398 அல்வாய் மத்தி 2020.03.15

 

2 J/418 மணற்காடு 2020.03.22
4 J/420 குடத்தனை வடக்கு 2020.03.19
5 J/421 பொற்பதி 2020.03.22
7 J/423 நாகர்கோவில் கிழக்கு 2020.03.15
8 J/424 நாகர்கோவில் மேற்கு 2020.03.15
9 J/425 நாகர்கோவில் தெற்கு 2020.03.22
10 J/426 செம்பியன்பற்று வடக்கு 2020.03.22
11 J/432 வெற்றிலைக்கேணி – 2020.03. 16
12 J/433 முள்ளியான் 2020.03.19
13 J/429 வத்திராயன் 2020.03.15
14 J/430 உடுத்துறை 2020.03.15
15 J/431 ஆழியவளை 2020.03.15
16 J/428 மருதங்கேணி- 2020.03.15

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *