பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள மந்திகை ஆதார வைத்தியசாலையின் வீதியின் இருபுறங்களிலும் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வருகை தரும் பார்வையாளர்களாகிய பொதுமக்கள் தமது வாகனங்களினை அப்பகுதியில் நிறுத்தி வைப்பதால் வைத்தியசாலைக்கு சேவையினை பெற்றுக் கொள்வதற்க வரும் நோயளர்கள் சிரமத்திற்குள்ளாவதுடன் அப்பகுதிகளில் வாகன விபத்துக்களும் அதிகளவில் நடைபெறுவதாலும் நோயாளர் காவு வண்டி சேவைக்கு பாரிய இடையூறாக உள்ளதாலும் இப்பிரச்சனைகளை கட்டுப்படுத்தி நோயாளர்களை பாதுகாக்கும் வகையில் மந்திகை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மற்றும் வீதிப்போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு,பருத்தித்துறை பொலிஸ் நிலையமும் கேட்டுக் கொண்டதற்கமைய பருத்தித்துறை பிரதேசசபை செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களால் இச் செயற்பாடு 2024.03.14 அன்று மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே பொதுமக்களாகிய பார்வையாளர்கள் நீங்கள் உங்கள் உறவினர்களின் நலனினை கருத்தில் கொண்டு உங்களது வாகனங்களை பொருத்தமான பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது சிறப்பானதாகும்.