2023ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களின் செயல்திறனைஅடிப்படையாகக் கொண்டு அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் சுயாதீனக்குழுக்களால் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. பற்றாக்குறையான வளங்களையும் அதிகுறைந்த வருமானத்தையும் கொண்ட சபையாக காணப்பட்ட போதிலும் அனைவரதும் வினைத்திறனான விடாமுயற்சியின் விளைபயனாக இம்மதிப்பீட்டில் எமது பருத்தித்துறை பிரதேசசபை யாழ்மாவட்டத்தில் முன்றாவது இடத்தினையும், வடமாகாணத்தில் ஐந்தாமிடத்தையும் பெற்று, முதலாவது வகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டிற்கு 44.00 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி ஏற்பாட்டின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.