தற்போதைய சூழலில் ஏற்பட்டு வரும் டெங்நோய்த் தாக்கமானது அதிகமாக காணப்படுவதனால் சிரமதான நிகழ்வின் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசத்தினையும் சுத்தமாக வைத்திருப்பதற்காக கிராம மட்ட அமைப்பான சனசமூக நிலையங்களுடன் இணைந்து விழப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலினை துப்பரவு செய்யும் நோக்கில் உள்ளுராட்சி ஆணையாளரின் பணிப்பிற்கமைய பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு. அ. வினோராஜ் தலைமையில் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர், பொதுமக்களுடன் இணைந்து அந்நிகழ்வினை மேற்கொண்டார்கள். மேலும் பிரதேசத்தினை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க மக்களுடனான பங்களிப்புக்கள் அவசியமானதாக உள்ளமை சிறப்பானதாகும்.