உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அமைச்சின் செயற்பாட்டின் அடிப்படையில் பிரதேசத்தின் டெங்கு பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் அவற்றின் எல்லைக்குட்பட்ட பகுதியினை துப்பர செய்யும் நிகழ்வானது ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் தற்காலத்தில் பருத்தித்துறை பிரதேசசபையில் வாரந்தோறும் குறித்த நாளுக்குரிய குறித்த வட்டாரத்தில் குப்பைகளினை அகற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் அது தொடர்பான அறிக்கைகளும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் எமது கிராமத்தினை டெங்கு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அத்துடன் அகற்றப்படும் குப்பைகளினை தரம்பித்து வைப்பதன் மூலமாக சிறப்பான திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை மேற்கொள்ள கூடியதாக இருக்கும்.
பிளாஸ்ரிக் கழிவுகளற்ற சமூகத்தினை உருவாக்கும் நோக்கில் பிரதேசசபைகள் செயற்பட்டு வருவதுடுடன் அதற்கு மக்களின் பங்களிப்புக்கள் மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது.