வடமராட்சி கிழக்கு யா/ செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு வாசிப்பு மாத நிகழ்வாக மாணவர்களிடையே கட்டுரை போட்டி நடாத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் 120 பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களும் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் திரு.அ.வினோராஜ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் கலந்த சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்வரும் பாடசாலையை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
- யா/நாகர்கோவில் ம.வி
- யா/உடுத்துறை ம.வி
- யா/செம்பியன்பற்று அ.த.க.பா
- யா/அம்பன் அ.மி.த.க.பா
- யா/ மருதங்கேணி இ.மி.த.க.பா
- யா/மணற்காடு றோ.க.த.க.பா
- யா/குடத்தனை அ.த.க.பா
- யா/கட்டைக்காடு றோ.க.த.க.பா
- யா/ குடத்தனை அ.மி.த.க.பா