யா/ செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் தரம்பிரித்து திண்மக்கழிவகற்றல் செயற்பாட்டினை மேற்கொள்ளுதல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் எமது பிரதேசத்தினை தூய்மையானதா மாற்றுவதுடன் தொற்றுநோய்களிலிருந்து சமூகத்தினை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் போது திண்மக்கழிவகற்றல் தொட்டியானது பங்குபற்றிய பாடசாலை ஆசிரியர்களிடம் திரு.அ.வினோராஜ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் கலந்த சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.