வீதியை ஊடறுத்துவெட்டுவதற்கான அனுமதி

உள்ளூராட்சி மன்றமானது தனது அதிகாரப் பிரதேசத்திற்குள் கிடைக்கின்ற பௌதீக மனிதவளங்களை ஒருங்கிணைத்து உட்கட்டமைப்பு சேவையினை அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சில அபிவிருத்தி வேலைகளின் பொது வீதிகளுக்கு சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படமுடியாததொன்றாகும். அதேவேளை வீதிகளுடாக மேற்;கொள்ளப்படும் வேலைகள் சிறப்பாகவும் திருப்தியாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதுடன், வீதியில் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பிரதேச அபிவிருத்திக்கு தடை ஏற்படாத வகையிலும் விதிக்கப்பட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றி அனுமதி வழங்கப்பட வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

• விண்ணப்ப படிவங்கள்
• நீர் வழங்கல் சபையின் கடிதம்

• இடத்தின் வரைபடம்

செலுத்த வேண்டிய கட்டணம்

இது வெட்டப்படுகின்ற அளவுகளை பொறுத்து மாறுபடும். அதாவது வீதியின்; மறு புறத்தில் தண்ணீர் இணைப்பு இருந்தால், வீதியை மறுபுறம் வெட்ட வேண்டும், கட்டணம் அதிகமாக இருக்கும்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

விடய உத்தியோகத்தர்

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை

ஒரு நாள்