வியாபார வரி

மேற்குறிப்பிடப்பட்ட வியாபார உரிமம் பெற வேண்டிய வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வியாபார நிலையங்களுக்கும் வருடாந்த கட்டணமாக வியாபார வரியை 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 150இ151 பிரிவின் கீழ்; அறவிட்டுக்கொள்ள முடியும்
இதற்கமைய உச்ச கட்டணமாக பிரதேசசபை ரூபா 1000.00 வியாபார வரியாக விதித்து அறவிட்டுக்கொள்ள முடியும.; வியாபார வரி செலுத்த தவறும் பட்சத்தில் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 150(4) ஆம் பிரிவின் கீழ்; சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
வியாபார நிலையங்களுக்கு வியாபார வரியாக விதித்து அறவிட்டுக்கொள்ளும் நடைமுறைகள் கீழ்வருமாறு

1. வியாபார விண்ணப்பத்தை வழங்கல்
2. வியாபார விண்ணபத்தைப் பூரணப்படுத்தி சமர்ப்பிக்கும் போது கீழ்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்
I. வியாபார நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்
II. நிலுவை அற்ற சோலை வரி அறவீட்டு அறிக்கை
3. மேற்குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தி செய்யப்படும் இடத்து வியாபார வரி அறவிட்டுக்கொள்ள முடியும்.

செலுத்த வேண்டிய கட்டணம்
வியாபாரத்தின் தன்மைக்கேற்ப காலத்திற்குக்காலம் பிரதேச சபையினால் தீர்மானித்து வர்த்தமானியில் வெளிப்படுத்தப்படும் கட்டணம் அறவிடப்படும்.

விண்ணப்பப்பத்திரங்களை பருத்தித்துறை பிரதேசசபையின் உப அலுவலகங்களான புலோலி உப அலுவலகம், குடத்தனை உப அலுவலகம், மருதங்கேணி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

1. உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

2. விடய உத்தியோகத்தர்

3.வருமானப் பரிசோதகர்

 

தொடர்பு இல. 021 226 1707