திண்மக்கழிவகற்றல் சேவை

உள்ளுராட்சி மன்றங்களினால் வரிப்பணம் அறவிடப்படுகின்ற பிரதேசத்திற்குள் அமைந்துள்ள வீடுகளிலுள்ள சமையல் கழிவுகள் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகளை சேகரித்து அகற்றுதல் அந்த உள்ளுராட்சி நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இவற்றை உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என வகைப்படுத்தி சேகரித்து உரிய வகையில் முகாமைத்துவம்செய்யவேண்டிய பொறுப்பு பிரதேசசபைக்கே உரியது ஆகும். இது கட்டணம் எதுவும் அறவிடப்படாது பிரதேசசபையினால் மேற்கொள்ளப்படும் இலவச சேவை ஆகும்.