உயர் தொழில் மீதான வரி

கீழ் வரும் வியாபார நிலையங்களின் கடந்த ஆண்டின் பெறுவனவுகளுக்கு ஏற்ப செலுத்துவதற்கு 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 152 ஆம் பிரிவின் கீழ் கட்டளையிடமுடியும் என்பதுடன் அதன் உச்ச கட்டணமாக ரூபா 3000.00வை உயர் தொழில் வரியாக விதித்து அறவிடமுடியும் . 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 152(2) ஆம் பிரிவின் கீழ்; சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

1. கொமிசன் முகவர்
2. கட்டட ஒப்பந்தக்காரர்
3. காசுக்கடன் கொடுப்போர்
4. புறோக்கர்கள்
5. சாரதி பயிற்சி நிலையத்தை வைத்திருப்போர்
6. ஏல விற்பனையாளர்
7. பண முதலிடுவோர்
8. தனிப்பட்ட கல்வித்தாபனங்களை வைத்திருப்போர்
9. காப்புறுதி முகவர்கள்
10. ஆலோசனைச் சேவை ஸ்தாபனங்களை வைத்திருப்போர்
11. சுற்றுலா பஸ்சேவை நடத்துவோர்
12. சமான் ஏற்றி இறக்கும் சேவைகளை நடாத்துவோர்
13. நகையீடு பிடிப்போர்
14. தேசிய அல்லது பிறநாட்டு வங்கித்தாபனங்கள்
15. உத்தரவு பெற்ற நில அளவையாளர்கள்
16. உத்தரவு பெற்ற பட வரைஞர்கள்
17. தனியார் வைத்தியசாலைகள் ஆலோசனை நிலையங்கள்

மேற்படி வியாபார நிலையங்களுக்கு உயர் தொழில் வரியாக விதித்து அறவிட்டுக்கொள்ளும் நடைமுறைகள் கீழ்வருமாறு

1. வியாபார விண்ணப்பத்தை வழங்கல்
2. வியாபார விண்ணபத்தைப் பூரணப்படுத்தி சமர்ப்பிக்கும் போது கீழ்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்
I வியாபார நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்
II நிலுவை அற்ற சோலை வரி அறவீட்டு அறிக்ககை
3. மேற்குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தி செய்யப்படும் இடத்து உயர் தொழில் வரி அறவிட்டுக்கொள்ள முடியும்.

நடைமுறைகள்
1. வியாபார விண்ணப்பம் வழங்கல்
2. வியாபார விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
அ. வியாபார நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்.
ஆ. நிலுவையற்ற சோலைவரி அறவீட்டு அறிக்கை
3. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்பட்சத்தில் வரி அறவிடப்படும்